திராவிட மாடல் ஆட்சி.. CM ஸ்டாலின் சொன்னது நிச்சயம் நடக்கும் : கர்நாடகா தான் பிள்ளையார் சுழி ; அமைச்சர் பொன்முடி

Author: Babu Lakshmanan
13 May 2023, 4:45 pm
Ponmudi - Updatenews360
Quick Share

திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் வரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அது முதலில் கர்நாடகாவில் எதிரொலித்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது :- தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் வரும் என தெரிவித்து உள்ளார். அது கர்நாடகாவில் எதிரொலித்து உள்ளது. நாடளுமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்கும்.

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மாட்டோம். மாநில கல்வி கொள்கை அமைப்பு குழுவில் தான் இடம்பெற்று இருப்பதாகவும் அதன் உறுப்பினராக இருந்த ஜவகர் நேசன் என்னிடம் குறைகளை தெரிவித்தால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

9000 பள்ளி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கூடாது. அவர்களுக்கு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்களை சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி உள்ள நிலையில், அமைச்சர் அறிவுருத்தரின் பெயரில் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அவர்களது கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசிலீக்கப்படும்.

அவர்களுக்கான வயதை 47 ஆக கடந்த ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை 52 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் சட்ட ரீதியாக சில பிரச்சினை உள்ளதால் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு வார காலத்திற்குள் முடிவெடுக்கப்படும்.

போராட்டக்காரர்கள் போராட்டத்தை கையவிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளேன். சென்னை பல்கலை கழகத்தில் அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் மூன்று பாட பிரிவுகளும் தொடருவதற்கு சிண்டிக்கேடிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தற்போது 90 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூன் நான்காம் தேதி வரை அவாசம் இருப்பதால் கூடுதலாக வரும் நாட்களில் விண்ணப்பம் வரும் என எதிர்பார்க்கிறோம், தெரிவித்தார்.

Views: - 345

0

0