கத்துக்குட்டி உதயநிதி…! மெட்ரோ ரயில் நிலையம் விவகாரத்தில் கண்டித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

1 August 2020, 8:38 pm
MInister Rajendra Balaji Byte- updatenews360
Quick Share

சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஜெயலலிதா பெயரை வைத்ததற்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், ஆலந்தூர், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையத்துக்கு முறையே எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்கு பாராட்டுகள் ஒரு பக்கம் குவிய திமுகவின் அரசியல் கத்துக்குட்டியான உதயநிதி இதை விமர்சித்து டுவீட் போட்டு இருந்தார். அதில் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

அதற்கு பதிலடி தந்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் கூறியதாவது: சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள். திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவர்கள்.

சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி செல்வ செழிப்பானவர்கள். எனவே இதை குறை கூறும் தகுதி அரசியல் கத்துக்குட்டியான உதயநிதிக்கு கிடையாது. உனக்கு கத்து கொடுத்த தத்துக்குட்டிக்கும் கிடையாது.

தன் வாழ்க்கையை தியாகம் செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும் உரிமைக்குரல் கொடுத்த எங்கள் அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு என்று கூறி உள்ளார்.

Views: - 9

0

0