தமிழகத்தின் 2வது தலைநகரமாக இந்த மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் : அதிமுக அமைச்சர் கோரிக்கை!!

16 August 2020, 5:34 pm
RB Udayakumar - Updatenews360
Quick Share

மதுரை : மதுரை மாவட்டத்தை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அதிமுக சார்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை மாவட்டத்தை தமிழகத்தில் இரண்டாவது தலைநகராக் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாது பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாகயும், சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே குஜராத்தில் இரு தலைநகரங்கள் உள்ளன, ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாகவுள்ளன என்று மேற்கொள் காட்டி அமைச்சர் உதயகுமார், மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவித்தால் தென் மாவட்டங்களுக்கு இது வளர்ச்சி வாய்ப்பாக அமையும் என தீர்மானம் நிறைவேற்றினார்.