மாற்றுத்திறனாளிகளின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

15 February 2021, 8:57 pm
Quick Share

கோவை: கோவையில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாற்றுத்தினாளி வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஆலயம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 16 வது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் நேற்று இருசக்கர வாகன பேரணியுடன் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தடகள போட்டிகள் நேரு உள் விளையாட்டு அரங்கிலும், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி நீச்சல் குளத்திலும் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1200 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்போட்டிகள், நீளம் தாண்டுதல்,

உயர்ம் தாண்டுதல், குண்டெறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்ச்அர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அமைச்சருக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். பின்னர், விளையாட்டுப்போட்டிக்கான ஜோதியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க தலைவர் சந்திரசேகர் பேசுகையில், “குறுகிய காலத்தில் இந்த விளையாட்டுப்போட்டியை ஒருங்கிணைத்து நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி. எங்களிடம் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நேரு விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களின் உடமைகளை பாதுகாக்க ஒரு அறை தேவை, கோவைக்கு சர்வதேச தரத்தில் ஒரு விளையாட்டு மைதானம் தேவை. இதனை அமைச்சர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.” என்றார். இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “சங்கத்தின் முதல் கோரிக்கை இப்போதே நிறைவேற்றப்படும். சர்வதேச தரத்திலான மைதானம் அமைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் அந்த கோரிக்கையும் நிறைவேறும். மாற்றுத்திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்று முன்னாள் முதலமைச்சர் அடிக்கடி கூறுவார். அத்தகைய குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை இந்த அரசு செய்கிறது. இந்த விளையாட்டு போட்டிகளில் சாதிப்பதன் மூலமாக சர்வதேச அளவிலான போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.” என்றார். இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், தமிழ்நாடு பார ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Views: - 1

0

0