விரைவில் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில் கும்பாபிஷேகம் : அமைச்சர் சேகர்பாபு

12 July 2021, 7:48 pm
sekar babu - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் கோட்டை பகுதியில் பழம்பெருமை வாய்ந்த நீலகண்ட சுவாமி கோயில் அமைந்துள்ளது. பன்னிரு சிவாலயங்களில் ஒன்றான இக்கோயிலில் கடந்த ஆட்சியின்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொடர்ந்து பணிகள் நடைபெறாத நிலையில் கும்பாபிஷேகமும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் பயனாக தற்போது கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு . அதையொட்டி தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று கோயிலை பார்வையிட்டதோடு அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தாவது :- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்படும். அதன் முன்னோடியாக ராஜகோபுரம் கற்பகம் மண்டபம் கொடிமரம் ஆகியவற்றை புனரமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

அதற்காக 1.85 கோடி ரூபாய் செலவிலான திட்டம் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீட்டிற்கான அறிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12சிவாலயங்களையும் ஒருங்கிணைத்து சீரமைக்க முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து சிறப்பு நிதி ஒதுக்கப்படும். ஆன்மீக சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டி பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும், என்று கூறினார்.

Views: - 198

0

0