கோவில் இடங்களில் குடியிருந்தால் பட்டா கிடையாது : அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்…!!

Author: Babu Lakshmanan
30 June 2021, 11:33 am
Quick Share

தமிழகத்தில் கோவில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான ரூ.520 கோடி மதிப்பிலான 79 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கோவில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது. கோவில் இடங்களை வாடகைக்கு எடுத்து கடை வைத்துள்ளது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்.

இந்து சமய அறநிலையத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்வது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

Views: - 200

0

0