கிரேடு முறையில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமா..? அமைச்சர் விளக்கம்

4 August 2020, 12:55 pm
Quick Share

சென்னை: கிரேடு முறையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.

தமிழகம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் இப்போது வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பும் வெளியானது. இப்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன் லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் கிரேடு முறையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கும் போது இதை கூறினார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: எப்போதும் போல இந்த முறையும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. கிரேடு முறையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இருக்காது. 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லை. அதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறினார்.

Views: - 8

0

0