விரைவில் அனைத்து இல்லங்களுக்கும் காவிரி குடிநீர் : கரூர் மக்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

21 July 2021, 2:07 pm
karur senthil balaji - updatenews360
Quick Share

கரூர் : கரூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டு மற்றும் இல்லங்களுக்கும் தினசரி காவிரி குடிநீர் வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் நகராட்சியின் குடிநீர் பயன்பாட்டிற்காக வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார். அங்குள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது :- கரூர் நகராட்சி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது காவிரி குடிநீர் திட்டப் பணி போர்க்கால அடிப்படையில் சிறப்புத் திட்டம் மூலம் மேம்படுத்தப்பட உள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய் பதிக்கப்பட உள்ளது. 8 எம்.எல்.டி தண்ணீர் எடுப்பதற்கு பதிலாக 6 எம்.எல்.டி தண்ணீர் மட்டுமே எடுக்கப்படுகிறது. இதற்கான குழாய் 12 கிலோ மீட்டர் மாற்றி அமைக்கப்படும். இதற்காக ரூ.11 கோடி திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் நகராட்சி காவிரி குடிநீர் திட்டத்திற்கு ரூ. 25 கோடி சிறப்பு நிதி மூலம் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.68 கோடி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையும் ஆய்வு செய்து 30 நாட்களில் காவிரி குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

கரூர் நகர் பகுதி மக்களுக்கு தினந்தோறும் காலை 5 மணி முதல் 8 மணி வரை பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதன் மூலம் மக்களின் குடிநீர் பிரச்சனை முழுமையாக தீர்வு காணப்படும், என்றார்.

Views: - 129

0

0

Leave a Reply