ஆரணியில் பிரச்சாரத்தின் போது கண்கலங்கிய அமைச்சர்…. நம்பிக்கை கொடுத்த பாமக நிர்வாகிகள்..!!!

18 March 2021, 7:23 pm
sevur ramachandran - updatenews360
Quick Share

திருவண்ணாமலை : ஆரணியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போது, அமைச்சர் கண்கலங்கிய சம்பவம் அங்கு

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். பாமக செல்வாக்கு மிகுந்த தொகுதியான ஆரணியை பாமகவிற்கு வழங்காமல், அதிமுக எடுத்துக் கொண்டதாக அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆரணி தொகுதியில் பிரச்சாரத்திற்காக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சென்றார். அப்போது, பாமக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அந்த சமயம், தனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறி, கண்ணீர் விட்டார். இதனைக் கண்ட பாமக நிர்வாகிகள், தங்கள் வாக்குகளை முழுமையாக தருவதாக, அங்குள்ள கோவிலில் சத்தியம் செய்து கொடுத்தனர்.

Views: - 28

0

0