சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம் ; கொட்டும் மழையிலும் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆய்வு

26 November 2020, 7:48 pm
sp velumani - chennai - updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயலால் சென்னையின் முக்கிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 169-ல் உள்ள கண்ணன் காலணியில் ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 25 எச்பி பம்பு செட்டுகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், துணை ஆணையாளர் மேகநாதரெட்டி, வட்டார துணை ஆணையாளர் ஆல்பி வர்கிஸ், மண்டல கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ், மண்டல அலுவலர் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.