சேற்றில் இறங்கி நடந்தே சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! வீடு இழந்த பெண்மணிக்கு நிவாரணம் வழங்கி நெகிழ்ச்சி!

22 September 2020, 10:28 am
SP vElumani - Updatenews360
Quick Share

கோவை : காட்டு யானை தாக்கி வீடு இழந்த பெண்மணிக்கு அரை கிலோ மீட்டர் தூரம் சேற்றில் நடந்து சென்று ஆறுதல் கூறி 5 ஆயிரம் ரூபாயை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அவ்வப்போது பயிர்களை பயிர்களைத் தின்று சேதப்படுத்தியும் அங்குள்ள பொதுமக்களை தாக்கியும் வருகிறது.

இந்த சூழ்நிலையில் நரசிபுரம் அருகே உள்ள சமணம் புதூர் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புகுந்த காட்டு யானை அங்கு உள்ள பாப்பம்மாள் என்பவருடைய வீட்டை இடித்து சேதப்படுத்தியது. இந்த நிலையில் இன்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவருடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார்.

அப்பொழுது யானை இடித்து சேதப்படுத்திய பாப்பம்மாள் என்பவருடைய வீட்டிற்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் சென்றார். அப்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் சேற்றில் இறங்கி அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளிடம் காட்டு விலங்குகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புகும் பட்சத்தில் அவற்றை தொடர்ந்து கண்காணித்து காட்டிற்குள் மீண்டும் விரட்டியடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும், மேலும் இதேபோல பொதுமக்களும் காட்டு விலங்குகளை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வனத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் நோக்கமாகும் என்றார்.