அட.. இவரு நம்ம அமைச்சராச்சே… டெல்லியில் ஜாக்கிங் சென்ற மா.சுப்பிரமணியன்.. வைரலாகும் வீடியோ!!

17 July 2021, 11:53 am
ma subramanian- updatenews360
Quick Share

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாடாளுமன்றத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அவசிய தேவைகளை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் டெல்லி சென்றார். அப்போது அவர் நாடாளுமன்றத்தின் அருகிலேயே உடற்பயிற்சி செய்தார். நாடாளுமன்றத்தை நோக்கி ஓடுவது மற்றும் அங்கிருந்து வருவது உள்ளிட்ட வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அதை அவர் டுவிட்டரில் அவர் பெயரிலேயே பதிவிட்டுள்ளார்.

அதில் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அவசியத் தேவைகளை கேட்டுப்பெற டெல்லிக்கு வந்துள்ள நாம், பாராளுமன்றத்தின் அருகேயே, இன்றைய உடற்பயிற்சியினை மேற்கொண்டு வருகிறோம் என்று வார்த்தைகள் அடங்கிய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.

Views: - 90

0

0

Leave a Reply