அக்.,12ம் தேதி செம்மொழியான தமிழ் மொழி தினமாக கொண்டாட திட்டம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!!!

Author: Babu Lakshmanan
29 July 2021, 3:47 pm
thangam thennarasu - updatenew360
Quick Share

மதுரை : வரும் அக்.,12ம் தேதி செம்மொழியான தமிழ் மொழி தினமாக கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக அமைச்சர் தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- வரும் அக்டோபர் 12 ஆம் தேதி செம்மொழியான தமிழ் மொழி தினமாக கொண்டாட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கீழடி, அகரம், மணச்சநல்லூர், மாங்குளம் ஆகிய பகுதியில் கிடைத்த அகல்வாராய்ச்சி பொருட்கள் தமிழ் சமூகத்தின் தொன்மை வரலாற்றை நிரூபிக்கின்றது.

மாங்குளத்தில் கிடைத்த பரிசு பொருட்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரிய வருகிறது. தற்போது கீழடியில் கிடைத்த பொருட்கள், வெள்ளிக்காசு போன்றவை வைகைக்கரை சமயம், கங்கைக் கரை சமயங்களையும் இணைந்து வணிகம் நடத்தியதற்கான சான்றாக வெளிக்காட்டியுள்ளது. இதேபோல், கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் சமூகம் நாகரிகமாக செயல்பட்டுள்ளது என தெரியவருகிறது

ஒருசிலர் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். அதுகுறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ் தமிழர் நாகரிகம் போன்றவற்றை உலகறியச் செய்யும் ஆராய்ச்சி முடிவுகளை தமிழக அரசு தொடர்ந்து செய்யும்.

தமிழ் தமிழர்களுடைய பண்பாடு நாகரீகத்தை புறக்கணிக்க முடியாது. தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு இடங்களில் நடைபெறும் அகல்வாராய்ச்சி முடிவுகளை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், நாம் தமிழர் உடைய வரலாற்று தொடர்புகள், பின்னணிகளை வெளிக் கொண்ட வரத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழ் சமூகம் பெருமையடையும், எனக் கூறினார்.

Views: - 323

0

0