சமூக நீதி வளர்ச்சிக்கான வார்த்தைகளை தவிர்ப்பு.. எங்க கிட்ட ஆதாரம் இருக்கு ; ஆளுநர் செயலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேதனை!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 2:38 pm
Quick Share

அம்பேத்கருடைய பேரைக் கூட உச்சரிக்காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஆளுநர் உரையை நடத்தும் போது எந்தவித எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்காமல் இருந்தோம். ஜனநாயக ரீதியில் ஆளுநர் கூறிய மரியாதையே அரசின் சார்பில் தந்துள்ளோம்.

ஆளுநர் வாசிக்கும் போது நடைமுறைக்கு மாறாக சட்ட விதிகளுக்கு மாறாக, அவைகளை மீறக்கூடிய வகையில் அரசியலமைப்பின் விதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் ஆளுநர் இன்றைக்கு உரையினை வாசித்துள்ளார். மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அம்பேத்கருடைய பேரைக் கூட உச்சரிக்காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளார். இன்றைய ஆளுநர் உரையை தவிர்த்தது, அரசு உடைய கொள்கைகளை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூகநீதி, சமத்துவம், பெண்ணடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் உள்ளடக்கிய வளர்ச்சியை, இவை எல்லாம் மேற்கொள்ள கூடிய வார்த்தைகளை ஆளுநர் உரையில் தவிர்த்து உள்ளார்.

தேசிய கீதம் பாடி முடிப்பதற்கு முன்பாகவே அதிமுக சென்றது அவை மரபுகளை மீறி முறையில் செயல்பட்டுள்ளார்கள். 5ம் தேதி முதலமைச்சரும் ஒப்புதல் அளித்து, 5ம் தேதி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. 7ம் தேதி ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கான ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கொள்கை வேறு, ஆளுநர் சட்டமன்றத்தின் அரசின் கொள்கைக்கு மாறாக செயல்படுவது ஏற்புடையது அல்ல, எனக் கூறினார்.

Views: - 310

0

0