அதிமுக பாஜக கூட்டணி போல இல்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு I.N.D.I.A. கூட்டணி போல சிறப்பாக வாழ வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அவர் பேசியதாவது :- இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் வரவில்லை என்றாலும், அவரது எண்ணம் முழுவதும் இவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்கும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில், இங்கு அவருக்கு முழு உருவ சிலையை திறந்து வைத்த பிறகு, இங்கு நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சி என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆகவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு விழாவில் நடைபெற்றுள்ள இந்த திருமணம் காரணமாக மணமக்கள் நல்லதொரு வாழ்க்கையை அமைத்து வாழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. பல்வேறு சிறப்புகளுக்குரிய சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் மதியழகன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமைப்படுகின்றேன்.
இது ஒரு சுயமரியாதை திருமணம். மேலும், இது ஒரு காதல் திருமணம் என்பதால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. எனவே, மணமக்கள் நன்கு படித்தவர்கள், காதல் திருமணம் என்பதால் அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லத் தேவையில்லை. மணமக்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அதே நேரத்தில், சுயமரியாதையோடு, அவர்களது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், எந்த நேரத்தில் எதை விட்டுக் கொடுக்க வேண்டுமோ, அதை மட்டும் விட்டுக் கொடுத்து, நமது I.N.D.I.A. கூட்டணி போல சுயமரியாதையோடு இருக்க வேண்டும்.
அதிமுக, பாஜக கூட்டணி போல அந்த கூட்டணி இருக்கிறதா..? இல்லையா என்பதே தெரியாது. காலையில் இருக்கிறது என்பார்கள், மாலையில் இல்லை என்பார்கள். மறுநாள் இருக்கிறது, ஆனால் இல்லை என்பார்கள். அந்த மாதிரி ஒரு கூட்டணியாக இல்லாமல், அதிமுகவில் இருப்பது போல ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, டிடிவி அணி சசிகலா அணி, ஜெ தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி இப்படி பல்வேறு அணிகள் இருக்கிறது.
அதேபோல, திருமணம் ஆன பிறகு மாமியார் அணி, நாத்தனார் அணி என பல்வேறு அணிகள் இருக்கும். எனவே, அத்தனை அணிகளையும் நீங்கள் நன்றாக புரிந்து கொண்டு, நமது I.N.D.I.A. கூட்டணி போல சிறந்த திருமண வாழ்க்கையில் நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மணமக்களை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…
பண மோசடி வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
This website uses cookies.