“இன்னும் ரெண்டு மாசம் மட்டும் இத பண்ணுங்க“ : தமிழக மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!!

20 November 2020, 4:18 pm
Vijayabhaskar - Updatenews360
Quick Share

மதுரை : இன்னும் இரண்டு மாதங்கள் தமிழக மக்கள் முறையாக முககவசம் அணிந்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, கொரோனாவை அடுத்து டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த கேள்விக்கு, அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் குறைந்து வருகிறது அதனால் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என கூறினார்.

பருவமழை காலங்கள், பண்டிகை காலங்கள் போன்ற சவால்களை சந்திக்க வேண்டியதுள்ளது என்பதால் இன்னும் இரண்டு மாதம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை போன்ற விதிமுறைகளை எச்சரிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Views: - 17

0

0