பதறியடித்துக்கொண்டு காரில் இருந்து இறங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
27 November 2020, 7:31 pmமதுரை : காரில் சென்ற போது வழியில் உயிருக்கு போராடிய பசுவை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி சென்ற விஜயபாஸ்கர், பசு இறந்ததை கண்டு பதறிப்போனார்.
சமீபகாலமாக அரசியல் பிரமுகர்கள் சாலைகளில் காரில் செல்லும் போது ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வைகயில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலமுறை இதுபோன உதவி செய்துள்ளார்.
அப்படி ஒரு சங்கதிதான் தற்போது அமைச்சருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. இருந்தாலும் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சம்பவத்தால் உறைந்து போயுள்ளார். திருச்சி – மதுரை சாலையில் கர்ப்பிணி பசு மாடு மீது கார் ஒன்று வேகமாக மோதியது. இதனால் பசு உயிருக்கு போராடியது.
அப்போது மதுரையில் இருந்து விராலிமலைக்கு காரில் வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், பசு மாட்டை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு சிகிச்சை அளிக்க மருத்துவரை தொடர்பு கொண்டார்.
பின்னர் காவல் ஆய்வாளர், சுங்கச்சாவடி மேலாளரிடம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை உடனே சுங்கசாவடியில் நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வர உத்தரவிட்டார். அதன் பின் பசுவிற்கு காலில் ஒரு கட்டு கட்டி முதலுதவி செய்தார்.
ஆனால் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே பசு உயிரிழந்தது. பதறிய அமைச்சர், கர்ப்பிணி பசு உயிரிழந்த சோகத்தில் உரிமையாளர் கண்ணீர் விட, அவருக்கு ஆறுதல் சொன்ன அமைச்சர், அரசு சார்பில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
சிகிச்சை அளிக்கும் போதே பசு உயிரிழந்த அதிர்ச்சியில் விம்மியபடி அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். காரில் சென்ற மனசாட்சி இல்லாதவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மனிதநேயம் கொண்டு அமைச்சர் பசுவுக்கு உதவிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
0
0