மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்!!

22 January 2021, 10:21 am
vijayabaskar- Updatenews360
Quick Share

சென்னை : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில்,சுகாதாரத் பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த நான் இதை ஒரு மருத்துவர் மற்றும் ஐஎம்ஏ உறுப்பினராக செய்கிறேன் என்றும், கோவிட் 19ல் இருந்து தடுப்பூசி போட்டு பாதுகாத்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கோள்வதாக பதிவிட்டுள்ளார்.

ள்கிறார். ஏற்கனவே சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0