முன்மாதிரியாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல் : கொரோனா தடுப்பூசி இன்று போட்டுக் கொள்கிறார்

20 January 2021, 8:03 am
Minister Vijayabhaskar - Updatenews360
Quick Share

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்ற நிலையில், பாதிப்புகளுக்கு ஏற்றவாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்த தடுப்பூசியின் டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை 9.45 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார். ஏற்கனவே சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0