கோவையில் மக்கள் சபை நிகழ்ச்சி: மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற மின்சாரத்துறை அமைச்சர்..!!

Author: Aarthi Sivakumar
18 November 2021, 9:52 am
Quick Share

கோவை: மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 1,41,351 மக்களை சந்தித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டத்தில் மக்கள் சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகின்றார்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சிகளில் 50 இடங்கள் என மொத்தமாக 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி கடந்த 30 ந்தேதி துவங்கியது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும், நடைபெற்று வந்த மக்கள் சபை நிகழ்ச்சி நிறைவடைந்தது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவில்மேடு பகுதியில் துவங்கிய மக்கள் சபை நிகழ்ச்சியில் கொட்டும் மழையில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து, பி என் புதூர், கே கே புதூர், வடவள்ளி, வீரகேரளம் மற்றும் பூசாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் மனுக்களை வாங்கினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 50 இடங்கள் என 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த 30ம் தேதி துவங்கிய இந்த மக்கள் சபை நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் மனுக்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில், இன்றுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், இதுவரை 1,41,351 மனுக்கள் வரப்பட்டுள்ளது.

மோசமான சாலைகளை புதுப்பிக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டியும், பாதாள சாக்கடை வசதி வேண்டியும், சீரான குடிநீர் வினியோகம் வேண்டியும் மனுக்கள் வரப்பட்டதாக கூறியவர், தமிழக முதல்வர் தளபதி மீது வைத்துள்ள நம்பிக்கையின் பேரில், இந்த மனுக்களை பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.

Views: - 187

0

0