எழுத்தறிவித்தவனே இறைவன் : நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் பேச்சு!!

7 September 2020, 4:28 pm
Rajendra Balaji - updatenews360
Quick Share

விருதுநகர் : எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என விருதுநகரில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கெளவரபடுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கல்வி ஒன்றே அழியாத செல்வம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், பெற்ற பிள்ளை போல் வகுப்பறையில் உள்ள அனைத்து பிள்ளைகளும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் பணி அறப்பணி. விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் சமுதாயப் பணியையும் இணைந்து மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0