திருமண ஆசை காட்டி மைனர் பெண் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது..!!

Author: Aarthi Sivakumar
17 January 2022, 9:29 am
Quick Share

கோவை: கோவையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்த ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை வடவள்ளியை அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுதாகரன் (21). சோமையம்பாளையம் பஞ்சாயத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அவ்வப்போது பொருட்களை ஏற்றி வருவார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையே அந்த சிறுமிக்கு திருமண ஆசை காட்டிய சுதாகரன் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், சுதாகரன் மீது சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Views: - 261

0

0