பிரியாணி வாங்கி கொடுத்து சிறுமிக்கு ‘பாலியல்‘ : 4 மாதம் கர்ப்பம் ஆனதால் அதிர்ச்சி!!

18 September 2020, 6:42 pm
Biriyani Rape- updatenews360
Quick Share

சென்னை : பிரியாணி வாங்கி கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி இருந்ததால் அண்ணாநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காண்பித்தபோது தனது 14 வயது மகள் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கேட்டபோது கொரோனா விடுமுறையில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த மணி என்ற மோகன்ராஜ் (வயது 28) என்பவர் பிரியாணி வாங்கி கொடுத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் புகாரில் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி என்ற மோகன் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரியாணி கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.