தனியாக இருந்த 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!!
25 September 2020, 11:03 amகோவை: வால்பாறை அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வலைகொம்பநாகூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் வீராசாமி என்பவரது மகன் நாகராஜ் (வயது 21).
இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசிப்பதால் கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது நாகராஜ் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். தற்போது 7 மாத கர்ப்பமான சிறுமி, தனக்கு நடந்ததை பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நாகராஜ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.