வீட்டுக்குள் புகுந்து பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்.. கோர முகத்தை காட்டிய கானா பாடகர்!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2024, 5:26 pm

சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியை தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

கணவரை பிரிந்து வாழும் நிலையில் இவரின் 15 வயது மகள் அவர் பணி செய்யும் பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 25 ம் தேதி வீட்டு பாடம் செய்திட வேண்டும் என வீட்டில் தங்கிய மாணவி வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பிற்பகலில் வீட்டு வாசலில் அழுதவாறு கைகளில் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார்.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லட்சுமியை செல்போனில் அழைத்துள்ளனர். அவர் வந்தவுடன் கட்டி அழுத மாணவி தன்னை குடிக்க தண்ணீர் கேட்பது போல் வந்த நபர் பலமாக தாக்கி பிளேடால் கைகளை அறுத்துவிட்டு பாலியல் பலத்காரம் செய்துவிட்டு சென்றதாக கதறியவாறு தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் செய்வதறியாது பெரும்பாக்கம் காவல் துறைக்கு தகவல் அளித்தார். வீடுபுகுந்கு பெண் பாலியல் பலாத்காரம் என்கிற தகவல் காவல் துறைக்கு சவால் விடும் விதமாக இருந்தால் உயர் காவல் அதிகாரிகள் அலறியடித்து தீவிர விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க உத்திரவிட்டனர்

இதனையடுத்து மாணவியை பல விதங்களில் விசாரிக்க வேண்டிய நிலையில் வழக்கும் கண்ணகி நகரில் உள்ள செம்மஞ்சேரி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

பெண் காவல் உதவி ஆய்வாளர் ஷோபியா தலைமையில் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பார்வையிட்டு மாணவியிடன் விசாரணை செய்தனர்.

மாணவியின் கையில் பிளேடால் கிழித்ததாக கூறிய நிலையில் வீட்டில் கண்ணாடி துண்டுகள் கிடைத்தது, மேலும் கையில் லேசான கிறல்கள் மட்டுமே இருந்தன.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரித்தபோது அங்குள்ள சந்தேகமான இளைஞர்களிடம் விசாரித்தனர்.

அப்போது யானை கவுனி பள்ளம் பகுதியை சேர்ந்த தினேஷ்(எ) காண்டு தினேஷ் என்பவன் தான் மாணவியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது,

இதனால் தினேஷை பிடித்து போலீசார் கிடுக்கு பிடி விசாரணையில் தினேஷ் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறை சென்று வந்ததும், துக்க நிகழ்வுகளுக்கு கானா பாடல்களை பாடி அதனை இண்டா கிராம் ஐ.டியில் பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டவர் என்பது தெரிய வந்தது.

யானை கவுனி அருகே செம்மஞ்சேரியில் மாணவியின் பாட்டி விடுக்கு சென்றபோது அங்குள்ள துக்க நிகழ்வில் பழக்கம் ஏற்பட்டு காண்டு தினேஷ் இன்ஸ்டா கிராம் ஐ.டியை மாணவி அவரின் அம்மாவின் ஸ்மார்ட் போன் மூலம் பின் தொடர்ந்துள்ளார்.

இந்த பழக்கத்தில் பெருமாக்கம் வந்த தினேஷ் சம்பவம் அன்று ஆசிரியை பள்ளி கிளம்பிய போது வீட்டின் கீழே இருந்து பார்த்துள்ளார்.

அம்மா சென்றவுடன் தினேஷ் மாணவியின் வீட்டிற்கு சென்றார், மாணவியும் அனுமதித்துள்ளார். அதன் பின்னர் ஒன்றாக தனிமையில் இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் மாணவியை கட்டாயப்படுத்தி தினேஷ் பாலியல் பலத்காரம் செய்துள்ளார். ஆனால் சம்பவத்தை உண்மையாக கூறாமல் மாணவி அவரின் அம்மாவிடம் பொய்யான தகவலை கூறியதால் அவரும் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தீவிர விசாரணையில் பள்ளிப் பருவத்தில் கூடா நட்பு கேடாக முடிந்தது. ஆனாலும் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோவில் கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அம்மாவிடம் உண்மையை மறைந்து பொய்யான தகவல் கூறி காவல் துறையினக்கு சவால் விடும் புகார் தெரிவித்த மைனர் மாணவின் உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில் மருத்துவ பரிசோதனை உட்படுத்தப்பட்டுள்ளார்.

  • Jason Sanjay in Vidaamuyarchi Audio Launch விடாமுயற்சி ஆடியோ விழாவில் விஜய் மகன்? தயாரிப்பு நிறுவனம் அப்டேட்!
  • Views: - 401

    0

    0