என் மேல கைபட்டா குத்திட்டு செத்துருவேன்.. போலீசாரிடம் ரவுசு காட்டிய சூப்பர் மாடல்..!! கொத்தாக அள்ளிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
14 August 2021, 5:02 pm
meera mithun - updatenews360
Quick Share

சென்னை : என்னை முடிஞ்சா கைது செய்து பாருங்க என தமிழக போலீசாருக்கு சவால் விட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் மாடல் என தனக்கு தானே பட்டத்தை சூட்டிக் கொண்டு, கிடைக்கும் ஒன்றிரண்டு படங்களில் நடத்தும் முகம் வெளியே தெரியாத நிலையில், சமூக வலைதளங்களின் மூலம் வெறும் சர்ச்சையினாலேயே எதிர்மறையான புகழுக்குச் சென்றவர் மீரா மிதுன். அப்படி பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சர்ச்சை நாயகியாகவே வலம் வந்தார்.

அந்த நிகழ்ச்சியில் கூட இயக்குநர் சேரன் தன்னிடம் அவதூறாக நடந்து கொண்டதாகக் கூறி விட்டு, சமூக வலைதளங்களில் பாய் பெஸ்ட்டியுடன் அடிக்கும் லூட்டி பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தையே கிளப்பி வந்தது.

அதுமட்டுமில்லாமல் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை விமர்சித்து செமத்தயாக ரசிகர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் மூக்குடைபட்டு வந்த சூப்பர் மாடல் மீரா மிதுன், தற்போது சாதி பற்றி பேசி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

அதாவது, பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும், இத்தகைய சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என ஏகத்துக்கும் இழிவுபடுத்தி பேசினார் மீரா மிதுன். அவரது இந்த பேச்சு திரைத்துறையில் மட்டுமல்ல பொதுவாக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட பலரும் மீரா மீதுன் மீது புகார்களை அளித்தனர். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு- சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்ய தூண்டுதல், ஜாதி மதம் குறித்து பேசி கலகத்தை உருவாக்குதல் என ஜாமீனில் வெளிவர முடியாத 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக மீரா மிதுன் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு -சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கேரளாவில் தங்கியிருந்த நடிகை மீராமிதுனை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்ற போது, மீரா மிதுன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ” முதலமைச்சர் அவர்களே, ஒரு பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கனுமா..?. போலீஸ்னா அட்ராசிட்டி பண்ணுவீங்களா. என் போன் தர முடியாது. என் மேல கைப்பட்டா கத்தியால குத்திட்டு செத்துருவேன். முதலமைச்சர் அவர்களே… பிரதமர் மோடி அவர்களே… தமிழக போலீசார் என்ன டார்ச்சர் பண்றாங்க,” என கூறி கதறியுள்ளார்.

இதையடுத்து, ஒரு வழியாக மீரா மிதுனை பெரும் போராட்டத்திற்கு பின்பு கைது செய்த போலீசார், அவரை சென்னை அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 539

3

0