ஓய்வுக்கு பின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுகிறேன்…! தோனிக்கு ஸ்டாலின் வாழ்த்து

16 August 2020, 11:27 am
Stalin 02 updatenews360
Quick Share

சென்னை: ஓய்வுக்கு பின் தோனியின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

தல என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரின் ஓய்வுக்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: #MSDhoniயின் சகாப்தம் தவற விடப்படும். கிரிக்கெட் மற்றும் சுறுசுறுப்பான தலைமைக்கு நீங்கள் செய்த சிறப்பான பங்களிப்புகளுக்கு நன்றி, கேப்டன் கூல். அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தமது டுவிட்டர் செய்தியுடன் ஒரு போட்டோவை பதிவிட்டு உள்ளார். அந்த போட்டோ தோனி, கருணாநிதியுடன் அருகில் இருக்கும் போட்டோவாகும். கருணாநிதி ஒரு கிரிக்கெட் ரசிகர் என்பதால் அவருடன் இருந்த தோனியின் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.