மும்மொழி கொள்கை மோசடி..! இருமொழி கொள்கை ஏமாற்று வேலை…! கருணாஸ் ‘காண்டு’

3 August 2020, 1:48 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் இருமொழி கொள்கையே தேவையில்லை என்று நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மும்மொழி திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழக முதலமைச்சருக்கு திமுக கடிதமும் எழுதியது. அதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த முடியாது. எப்போதும் போல இருமொழி கொள்கையே தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கருத்து கூறி உள்ளார். அவர் தெரிவித்து இருப்பதாவது;

மும்மொழி கொள்கை மோசடி என்றால், இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலை. ஒரு மொழி கொள்கை என்பதே நமது உரிமை கொள்கை. அதை தான் எதிர்காலத்தில் நிலைநிறுத்த வேண்டும். தாய்மொழி தமிழை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Views: - 2

0

0