தொகுதி பக்கமே காணோம்…இங்கயாவது இருக்காரா? எம்.எல்.ஏ.வை தேடி அறிவாலயத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு!!

3 September 2020, 6:39 pm
MLA Miss 1 - Updatenews360
Quick Share

சென்னை : சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என அண்ணா அறிவாலயத்திற்கு பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்றைய நாள் திமுகவிற்கு ஒரு முக்கிய நாளாக கருத்தப்படுகிறது. ஏனென்றால் திமுகவில் காலியாக இருந்த பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி இன்று நிரப்பட்டது. இதனால் அண்ணா அறிவாலயமே பரபரப்பாகவும் கூட்டமாகவும் காணப்பட்டது.

ஆனால் இந்த நிலையில், புகார் மனு கொடுக்க சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் அறிவாலயத்தில் திரண்டிருந்ததால் அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பட்டது. கூட்டத்தை பார்த்த ஸ்டாலின் என்ன ஏது என்று விசாரிக்க சொன்னார்.

உடனே கூடியிருந்த பெண்களிடம் திமுக நிர்வாகி விசாரித்தார். அப்போது சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் வெகுநாட்களாக காணவில்லை என்றும், இது வரை எங்கள் தொகுதியில் கொரோனா கால உதவிகள் எதுவும் செய்யவில்லை என்று கூறி புகார் மனு அளித்தனர்.

மேலும் அவர் எங்கு இருக்கிறார், இதுவரை அவர் எங்களை சந்திக்கவில்லை என்றும், நாங்கள் அனைவரும் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகர் பகுதியில் இருந்து வருவதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ந்து போன திமுக நிர்வாகி மனுவை பெற்று , இது குறித்து ஸ்டாலினிடம் முறையிடுகிறேன் என கூறினார்.

மேலும் கொரோனா காலத்தில் கும்பலாக இப்படி வரக்கூடாது என விரட்டியுள்ளார். இதையடுத்து இந்த இடத்திலும் எம்எல்ஏ இல்லை என்று பெண்கள் கூட்டம் புறப்பட்டு சென்றது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக மீது தொகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0