அறநிலையத்துறை நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் : அமைச்சரிடம் எம்எல்ஏ காந்தி கோரிக்கை

13 July 2021, 8:07 pm
MR gandhi - sekar babu - updatenews360
Quick Share

சென்னை : இந்து அறநிலையத்துறை நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று குமரி பாஜக எம்எல்ஏ எம்ஆர் காந்தி, அமைச்சர் சேகர் பாபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை கோவில்களில் இரண்டு நாட்களாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இரண்டாவது நாட்களாக இன்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம். ஆர்.காந்தி நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நூலகம் கட்டபட்டு திறக்கப்படாமல் இருப்பதாகவும், அதனை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து அமைச்சர் சேகர்பாபு அந்த நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அதனைத் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Views: - 253

1

0