அதிமுகவுக்கு சசிகலாவின் தயவு தேவைப்படாது… உள்ளாட்சித் தேர்தலில் மீண்டெழுவோம் – எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிரடி பேச்சு

Author: Babu
31 July 2021, 5:21 pm
sasikala - rajan sellappa - updatenews360
Quick Share

சசிகலாவின் தயவு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது என்றும், அவர் துணை வந்தால் தான் அதிமுக மீண்டெழும் என்ற நிலை இல்லை என சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை ஆலங்குளம் பகுதியில் அதிமுக கிழக்கு கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசியதாவது :- உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மூன்று சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக, 46 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை பெற்றுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு தொண்டர்கள் தீவிர களப்பணி ஆற்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

கூட்டணி குறித்து தலைமை கழகம் முடிவே இறுதியானது தலைமை அலுவலகத்தின் முடிவை முழுமனதாக ஏற்று தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றி வெற்றி காண்போம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த மிகப்பெரிய கட்டமைப்புடன் அதிமுக உள்ளது. இந்தநிலையில் சசிகலாவின் தயவு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது. அவர்கள் துணை வந்தால் தான் அதிமுக மீண்டெழுவோம் என்ற நிலை இல்லை, என்று கூறினார்.

Views: - 154

0

0