தமிழக நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை.. வேறு எதற்காக தெரியுமா..? எம்எல்ஏ ராஜன்செல்லப்பா அதிரடி..

Author: Babu Lakshmanan
31 March 2022, 4:45 pm
Quick Share

திமுக வன்முறையை ஏவி விடும் இயக்கமாக உள்ளதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் பழங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களின் சுமை கூடியுள்ளதால், மாநில அரசு வரி விதிப்பை குறைக்க வேண்டும். டெல்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போகிறோம் என்ற பெயரில் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்க உள்ளார்.

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி நீட் தேர்வை ரத்து செய்ய எந்த ஆயத்தபணி மற்றும் ராஜதந்திர மந்திரத்தோடு பிரதமரை சந்திக்க உள்ளார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் துறை மாற்றி இருப்பது அவர்களது உட்கட்சி பிரச்சனை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.

திமுகவே மோசமான இயக்கமாக, வன்முறையை ஏவி விடும் இயக்கமாக, மக்களின் மனநிலையை அறியாத இயக்கமாக உள்ளது. திமுகவில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நான் மனக்குமுறலில் உள்ளன. இன்றைக்கு கூட்டணியை விட்டு விலகுவார்கள் என்ற நிலையே தற்போது உள்ளது.

நகை கடன் தள்ளுபடியில் திமுக மிகப்பெரிய முறைகேடு மற்றும் தவறான நடைமுறையை தயாரிக்கிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை பெற்றுள்ளதால் இயற்கையாகவே திமுகவிற்கு நடவடிக்கை கிடைக்கும், அப்போது தெரிவித்தார்.

Views: - 414

0

0