ஒப்பந்தத்தை கிழித்து திமுகவினர் மூஞ்சில எரிஞ்சிட்டு வாங்க : மமகவினர் அதிருப்தி!!

2 March 2021, 11:24 am
Mmk Unsatisfied -Updatenews360
Quick Share

சென்னை : மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ள நிலையில் அக்கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என அரசியல் கட்சியினர் படுவேகமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முஸ்லிம்களின் தேசபக்தி பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதையில்லை!- பேராசிரியர்  ஜவாஹிருல்லா பேட்டி | jawahirullah interview

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு நேற்று 2 தொகுதிகள் ஒதுக்ககப்பட்டு உடன்படிக்கையில் மமக தலைவர் ஜவாஹிருல்லா கையெழுத்திட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டு நலனுக்காகவும் தமிழக நலனுக்காக மனப்பான்மையோடு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியினர் தொகுதிப் பங்கீடு குறித்து கடுமையான வருத்தமும், அதிருப்தி குரலையும் எழுப்பி வருகின்றனர். மேலும் மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கட்சித் தொண்டர்கள் தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த 2 தொகுதிகளையும் அவர்களுக்கே கொடுத்து விட்டு தேர்தலை கௌரவமாக புறக்கணித்து இருந்தால்? தொண்டர்களின் உழைப்பாவது மிஞ்சியிருக்கும். எத்தனை எத்தனை போராட்டங்கள், மாநாடுகள், உடல் உழைப்பு, கைசெலவு செய்த, சாதாரண தொண்டனின் மனம் ஏற்க மறுக்கிறது. இதயத்தில் குடியிருந்தே அடிமையாகி போனவர்கள்? என்று தலைநிமிர்வோமோ!.. என ஹாஜா முபாரக் என்பவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒப்பந்தத்தை கிழித்து மூஞ்சில் எறிந்து விட்டு வாருங்கள், அறிவாலயம் வடமரைக்காயர் தெருவை தேடி வரும், ஏனென்றால் ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தலை விட்டால் இனி ஜென்மத்துக்கு முதல்வராக முடியாது என மஜித் கான் என்பவர் பதிவிட்டுள்ளார்.

மூச்சுக்கு முன்னூறு தடவை தளபதி தளபதி என்றும் அடுத்த முதல்வர் என்று ஸ்டாலினை புகழ்ந்ததை ஏற்றுக்கொள்ள மனம் கனக்கிறது. கூடுதல் இடம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக கூட்டணியில் இல்லாத, கூட்டணிக்கு வர விரும்பிய சகோதர கட்சிகளை கடுமையாக விமர்சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும், பேசவும் செய்தோம்.

பொருளாதாரத்திலும், உடல் உழைப்பாலும் பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டணி கட்சி என்ற பெயரில் முழு ஆதரவு அளித்தோம். நமக்கான முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதில் நமக்கு கிடைத்த பாடம். பலநாள் கொள்கை கூட்டணியை விட சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணிக்கு வலிமை அதிகம்.. நமக்கு கொடுத்த இரண்டு இடத்தில் நாம் நூற்றுக்கு ஐநூறு சதவீத உழைப்பை செலுத்தி வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ் என முகமது சமீர் என்பவர் பதிவிட்டுள்ளார்.

இப்படி மமகவினர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமுமுக தலைவராக இருந்த ஹைதர் அலி இன்று சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்று சசிகலாவை சந்தித்த பின், தினகரனையும் சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பு சிறுபான்மை அரசியலில் முக்கியத்துவம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Views: - 1

0

0