பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்த நீதி…! ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல் டுவிட்டர்

18 August 2020, 12:12 pm
kamal-updatenews360
Quick Share

சென்னை: பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி என்று ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று நேற்று  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தர முடியாது, அந்த ஆலைக்கு தமிழக அரசு விதித்த தடை தொடரும் என்று தீர்ப்பை அறிவித்தது. இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் பலத்த வரவேற்பு எழுந்துள்ளது. தூத்துக்குடியில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பல்வேறு அரசியல் தலைவர்களும் தீர்ப்பு குறித்து கருத்து கூறி வருகின்றனர். அதன்படி தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்று உள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 28

0

0