நடமாடும் கொரோனா பரிசோதனை மையம்: சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு பரிசோதனை
22 September 2020, 12:29 pmகோவை: சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 5 மண்டலங்களுக்கு 4 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் விதம், மொத்தம் 20 நடமாடும் பரிசோதனை வாகனங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று துவங்கி வைத்தார்.
இந்த வாகனங்களில் செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய இருவரும் வாகனத்திற்கு உள்ளே இருந்து பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் விதமாக இந்த வாகனம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வரும் பயணிகளுக்கு இந்த நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் கோரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.