வரைவு வாக்காளர் பட்டியல் : மாவட்ட அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

12 November 2020, 4:04 pm
Tamil Nadu Election Commission - Latest Tamil Nadu News
Quick Share

சென்னை : வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து தேர்தல் பணிகளும் தற்போது முதலே தொடங்கி நடந்து வருகின்றன. டிசம்பர் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாத தொடக்கத்திலோ வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. இதற்காக, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டது.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.

வரைவு வாக்காளர் பட்டியல் 16ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

Views: - 21

0

0

1 thought on “வரைவு வாக்காளர் பட்டியல் : மாவட்ட அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Comments are closed.