நாளை மோடியின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் : முருகன்…

24 February 2021, 1:22 pm
Modi Murugan- Updatenews360
Quick Share

திருப்பூர் : தமிழர்களுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் திமுக என பாஜக மாநிலத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நாளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதற்காக தாராபுரம் வழியாக கோவை சென்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகனுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் உருத்திரகுமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வேல்முருகனை வரவேற்றனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறுகையில் நாளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கோவையில் பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அதற்காக பாரதிய ஜனதா கட்சியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. நாளை தமிழகம் வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்காக வருகை தர இருக்கிறார்.

அவருடைய வருகை மிகப்பெரிய புத்துணர்ச்சியாக பேர் எழுச்சியாக இருக்கப்போகிறது. அதற்காக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றும் செயலை செய்து கொண்டிருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழர்களுக்கு எதிரானவர்கள், தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள், தமிழ் பண்பாட்டிற்கு எதிரானவர்கள், தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் அவர்களது பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாது மக்கள் அவர்களுக்கு தோல்வியை கொடுப்பார்கள் என தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் கூறினார்.

Views: - 11

0

0