கடன் வங்கி தருவதாக கூறி பணம் மோசடி : நிதி நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர் புகார்

10 July 2021, 8:28 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் கூலித் தொழிலாளியிடம் 5 லட்சம் கடனாக தருவதாக கூறி முன்பணம் ரூ 80 ஆயிரம் பணத்தை மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தூரப்பாளையம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி ஆராயி,இவர்களுக்கு திருமலை, சுரேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ஆராயி செல்போன் எண்ணிற்கு கோவை கிருஷ்ணா பைனான்ஸ் என்கின்ற நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் தாங்கள் 5000 ரூபாய் கட்டினால் 5 லட்சம் கடனாக தருவதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து ஆராயின் மகன் திருமலை வங்கிக் கணக்கிலிருந்து கிருஷ்ணா பைனான்ஸ் பங்கஜ் குமார் என்பவரின் வங்கிக்கணக்கு எண்ணிற்கு முதற்கட்டமாக ஐயாயிரத்து அனுப்பியுள்ளனர்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஆராயி கிருஷ்ணா பைனான்ஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டபோது மேலும் ஆவணம் தயாரிப்பதற்கு 25,000 அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். பின்னர் இதனை நம்பி ஆராயி மீண்டும் 25000 பணத்தையும் இரண்டாம் கட்ட தவணையாக அனுப்பி உள்ளார். பின்னர் மீண்டும் 2. நாட்கள் கழித்து ஆராயி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது உடனடியாக பணம் கிடைக்க வேண்டுமானால் மூன்றாம் கட்ட தவணையாக 38 ஆயிரம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். இந்த ஆசை வார்த்தையை நம்பி ஆராய மீண்டும் 38,000 படத்தை செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆராயி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது மேலும் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாள் உங்களது வங்கிக் கணக்கு 5 லட்சம் வருமென்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஆராயி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் நிதி நிறுவனம் மோசடியாக பறித்த 80 ஆயிரம் பணத்தை திரும்பப் பெற்று தருமாறு புகார் மனு அளித்துள்ளார்.

Views: - 132

0

0