சிறுவர்களுடன் கொஞ்சி விளையாடும் குரங்கு குட்டியின் சேட்டைகள்: கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

6 July 2021, 8:31 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் சுற்றித்திரியும் கூட்டத்தை விட்டு பிரிந்த குட்டி குரங்கு சிறுவர்களுடன் கொஞ்சி விளையாடும் காட்சி காண்போரை ரசிக்க வைத்ததுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் மேலவல்லம் தெருவில் கடந்த இரண்டு மாதங்களிகள் குரங்கு குட்டி ஒன்று சுற்றி திரிகிறது.அவ்வழியே சென்ற குரங்கு கூட்டத்தில் இருந்து பிரிந்த குரங்கு குட்டி அங்குள்ள மரங்களிளே வசிக்க தொடங்கியது.சில நாட்களுக்கு பின் அப்பகுதி மக்கள் குரங்கு குட்டிக்கு பழங்கள்,பிஸ்கட்டுகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர்.

இதனால் மரத்தை விட்டு இறங்கி கிராம மக்களிடம் நெருங்கி பழக தொடங்கியது. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது குரங்கு குட்டி அப்பகுதி சிறுவர்களுடன் கொஞ்சி விளையாடி வருகிறது. நேற்று மேலவல்லம் பகுதியை சேர்ந்த சிறுவன் விஜய் மீது ஏறி கொஞ்சி விளையாடிய குரங்கு குட்டியின் சேட்டைகளை அப்பகுதி இளைஞர்கள் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளர். இக்காட்சி காண்போரை ரசிக்க வைத்ததுள்ளது.

Views: - 139

0

0