ஆடி மாதம் துவக்கம்.. அம்மனின் அருள்காற்றும் அரவணைக்கும் : கோவில்களில் சிறப்பு வழிபாடு..!

17 July 2021, 10:02 am
Aadi Temple - Updatenews360
Quick Share

கோவை : ஆடி 1-ம் தேதியை முன்னிட்டு கோவையில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பெண் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் என்றழைக்கப்படும் ஆடி மாதத்தின் முதல் நாள் இன்று. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் பல அவதாங்களில் உள்ள அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதமே ஆடி மாதம் என்ற ஐதீகமும் உண்டு.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு.

கோவையைப் பொருத்தவரை கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆடி மாதம் முதல் நாள் மக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து தீபாராதனைகளை வழிபட்டு செல்கின்றனர்.

இதேபோல தண்டுமாரியம்மன் கோவில், பிளாக் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Views: - 122

0

0