தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம் : நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

4 September 2020, 7:10 pm
Trains_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் ஏற்கனவே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் 4வது கட்ட தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியது. அதன்படி, அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை – மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை – கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இன்று மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, 7ம் தேதி முதல் நாள்தோறும் சென்னை – மேட்டுப்பாளையம் இடையே மற்றும் திருச்சி-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 8ம் தேதி முதல் தினமும் சென்னை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயிலும், 10ம் தேதி முதல் வாரம் மூன்று முறை என சென்னை எழும்பூர்-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் உள்பட தற்போதைய புதிய ரயில்களுக்குமான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

Views: - 10

0

0