வேளாண் பல்கலையில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன

12 September 2020, 1:26 pm
Quick Share

கோவை: தமிழ் நாடு வேளாண் பல்கலை மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இணைய இதுவரை 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உதவி கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரிகளில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலா இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் அனைத்துமே இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.

தற்போது இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

இதுவரை விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார்,
முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Views: - 9

0

0