9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் காலி : மதுரையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைவு!!

22 June 2021, 10:34 am
Madurai Corona - Updatenews360
Quick Share

மதுரை : மதுரையில் 150க்கும் கீழ் குறைந்த கொரோனோ பாதிப்பு…தற்போது 1528 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர்…

மதுரை மாவட்டத்தில் கொரோனோ 2ம் அலையில் இதுவரை 50,083 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 48,788 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை தினசரி கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1200 முதல் 1500 வரை இருந்து வந்தது.

இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் 1200 முதல் 1500வரை இருந்து வந்த கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஒரு மாதமாக படிப்படியாக குறைந்து தற்போது 150க்கும் கீழ் குறைந்து நேற்று 144 ஆக குறைந்துள்ளது.

அதேபோல் குணமடைந்து திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்த நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்து படுக்கைகள் காலியாகி வருகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 9600 படுக்கைகள் காலியாக உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 90 சதவீதம் பேர் குணமடைந்து சென்றுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு குறைந்துள்ளதன் காரணமாக தற்பொழுது 1528 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

Views: - 123

0

0