பெண்கள் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டி பண மோசடி.! Instagram Idiots கைது.!!

3 July 2020, 7:31 pm
Insta Idiots -Updatenews360
Quick Share

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்கள் பதிவிடும் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களுக்கே திருப்பி அனுப்பி மிரட்டல் விடுத்து பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைதளங்களை எந்தளவுக்கு நல்லவற்றுக்காக பயன்படுகிறதோ அதே போல தீய செயல்களுக்கும் பெரும் பங்காற்றி வருகிறது. அதில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் ஏராளம். பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அப்படி வந்த ஒரு சம்பவம் தான், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ஒரு புகார் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்ட ஒரு பெண், தனது போட்டோவை மார்பிங் செய்து ஒரு கும்பல் தொடர்ந்து பணம் பறித்து வருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து களமிறங்கிய போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் இளம் பெண்கள் பதிவிடும் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அதனை அவர்களுக்கே அனுப்பி வைத்து, ஏராளமான படங்கள் இது போல உள்ளது என கூறி அவர்களை மிரட்டியுள்ளனர்.

தனது நண்பர்களுடன் தோழியாக பழக வேண்டும் இல்லையென்றால் மார்பிங் செய்த போட்டோக்களை வெளியிட்டு விடுவோம் என ஒருவன் மிரட்டி, பணத்தையும் பறித்துள்ளான். அது போல தனது நண்பர்களுக்கு அந்த போட்டோவை அனுப்பி, அவர்களையும் அந்த பெண்ணை மிரட்டி ஏழரை லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர்.

இந்த கும்பலை பிடிக்க எண்ணிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சிறப்பு சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்த புகாரை ஒப்படைத்தனர். இதையடுத்து களமிறங்கிய சைபர் குற்றப்பிரிவு போலீசார், பெண் பணம் அனுப்பிய Google pay, Phone pay, paytm போன்ற பணபரிவர்த்தனை மூலம் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கீழக்கரையை சேர்ந்த முகமது மைதீன் என்பவன் தான் முதல் குற்றவாளி. அவன் அந்த பெண்ணை மிரட்டி பணம் பறித்ததுடன்,தனது நண்பர்களுக்கும் அந்த பெண்ணின் செல்போன் எண் மற்றும் போட்டோக்களை அனுப்பியது தெரியவந்தது.

மேலும் இந்த கும்பலில் ஒருவன் ஜெர்மனியில் தங்கி படித்து வருபவன். அவனும் ராமநாதபுரத்தில் இருப்பது போல போலி கணக்குகளை துவங்கி வசதியா பெண்களை மோசடி செய்துள்ளான். சென்னை பாசித் அலி, புதுச்சேரி இப்ராஹிம், நெல்லை ஜாசம் கனி, கீழக்கரையை சேர்ந்த பைசூல், நாகை முகமது ஜாசிம் ஆகியோர் இந்த கும்பலில் இருந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இந்த கும்பலில் நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பைசூல் ஆகியோரை போலீசார் கைது செய்த போலீசார், ஜெர்மனியில் உள்ள முகமது மைதீன் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.