சாவிலும் மகளை பிரியாத தாய்: தாயும் மகளும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை

9 July 2021, 7:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 28வார்டு மாகாளியம்மன் தெருவில் வசிக்கும் அன்பு என்பவர் தனது மனைவி ரேணுகா (வயது44) மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகள் சங்கீதா (வயது21) தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். இளைய மகள் புவனா (வயது17) ஆன்லைன் வகுப்பில்12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அன்புவின் மனைவி ரேணுகா கடந்த 10மாத காலமாக மார்பு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுடன் அவதிபட்டு வந்துள்ளார். அதனால் அவ்வப்போது தனது இளைய மகள் புவனாவை அழைத்து கொண்டு மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை தனது கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் ஜாக்கெட் போன்ற துணி மணிகளை தைத்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அன்பு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது முன்கதவு உள் தாழிட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் கதவை தட்டியும் பதில் இல்லாததால் அன்புவின் அண்ணன் மகனான கோபியை ஜன்னல் வழியே பார்த்திட கூறியுள்ளார். கோபி ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது தாயும் மகளும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அலறினார். உடனே கோபியும்,அன்பும் சேர்ந்து முன்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி ரேணுகாவும், இளைய மகள் புவனாவும், ஒரே கம்பியில் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் அலறிய சத்தத்தினை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்தனர். தாயும், மகளையும் தூக்கிலிருந்து இறக்கி வைத்து விட்டு விஷ்ணு காஞ்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணவர் அன்பு மற்றும் சுற்று வட்டாரத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ரேணுகா எங்கே சென்றாலும் இளைய மகள் புவனாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு செல்வார்.இந்நிலையில் தன்னுடைய சாவிலும் இளைய மகள் புவனாவை தவிக்கவிடாமல் ஒரே நேரத்தில் தனது மகளையும் அழைத்து சென்றது அப்பகுதி மக்கிடையே பெரும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

பொதுவாகவே பாசம் எனும் கூட்டுக்குள் எதிர் பாலினத்தினவருடன் அன்பு ஏற்படுவது இயற்கை.ஆனால் அதற்கு மாறாக மூத்த மகள் தந்தை மீது பாசமும், இளைய மகள் தாய் மீது பாசமும் கொண்டிருப்பது விந்தையாக உள்ளது என அப்பகுதி மக்கள் சோகத்துடன் கூறுகின்றனர்.

Views: - 138

0

0