தோட்டத்தில் விவசாயம் பார்த்து வசித்து வந்த தாய், மகன் படுகொலை : மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 3:56 pm
Dgl Murder - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே தோட்டத்தில் வசித்த தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ஏரியோட்டை அடுத்த குருக்களையன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40) விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

நேற்றிரவு தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டில் தனது தாய் சௌந்தரம்மாள் (வயது 60) என்பவருடன் தங்கினார். இன்று காலை அவரது தோட்டத்து வீட்டுக்கு பால் கறப்பதற்காக பால்காரர் வந்து பார்த்துள்ளார்.

அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் யார் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தாயும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 488

0

0