சென்னையில், பெற்ற தாயே பிள்ளைகளை பாலியல் ரீதியாக உறவுகொள்ள அனுமதி அளித்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சையது (45) – பாத்திமா (38) தம்பதி. இதில், சையது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த தம்பதிக்கு 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், பாத்திமாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் முகமது ரபிக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், தனியார் வங்கி ஊழியர் அப்துல் கலாம் (23) என்பவருடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தை அடுத்து, முகமது ரபிக்கும், அப்துல் கலாமும், பாத்திமாவின் இரண்டு மகள்களையும் காதலிப்பதாகக் கூறி உள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு சையது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள் முதலில் படிக்கட்டும், அதன் பின் காதல், திருமணம் குறித்தெல்லாம் பேசிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், கணவரின் பேச்சை கேட்காத பாத்திமா, ரகசியமாக முகமது ரபீக்குடனும் அப்துல் கலாமுடனும் பேசி வந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், தனது மகள்களுக்கும் இருவரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து, இருவரும் பாத்திமாவின் மகள்களைக் காதலிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனக்கூறி தாயே மகள்களிடம் கூறியதால், இருவரையும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் இரவில் சையதிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பாத்திமா, இரண்டு இளைஞர்களையும் வீட்டுக்கு வரச்சொல்லி, தான் பெற்ற குழந்தைகளுக்கே பாலியல் தொல்லை அளிக்கச் சொல்லியிருக்கிறார். இதற்காக, அந்த இரண்டு இளைஞர்களிடமும் பாத்திமா பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தரமான சம்பவம் இருக்கு.!
காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டு, இரவில் இவ்வாறு நடந்து கொள்வது சிறுமிகளுக்கு தவறாக தெரிந்தது மட்டுமல்லாமல், இதற்காக இளைஞர்களிடம் தனது தாய் பணம் பெறுவதும் சிறுமிகளுக்கு உறுத்தவே, இதுகுறித்து 2 சிறுமிகளும் தங்களது அப்பாவிடம் கூறி உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சையத், பாத்திமாவைக் கண்டித்துள்ளார்.
மேலும் இளைஞர்கள் குறித்தும், தாய் பாத்திமா குறித்தும் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிகளின் தாய் மற்றும் முகமது ரபிக் மற்றும் அப்துல் கலாம் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.