கடன் தொல்லை.. தாய் – மகள் தற்கொலை முயற்சி..

7 March 2021, 7:09 pm
Quick Share

சிவகங்கை: காரைக்குடியில் கடன் தொல்லையால் தாய் மகள் தற்கொலை முயற்சி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரை சேர்ந்த ராமநாதன் மீனாள் தம்பதியினர் இவர்களுக்கு அண்ணாமலை நாச்சம்மை என்ற இரண்டு பிள்ளைகள் உண்டு ராமநாதன் பல்வேறு இடங்களில் அதிக அளவில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கடனை திருப்பி தரவில்லை என அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில் நேற்று இரவு தூங்கச் சென்ற மீனாள் மற்றும் நாச்சம்மை இருவரும் காலை வெகுநேரமாகியும் எழுந்திரிக்க வில்லையாம் சந்தேகமடைந்த அண்ணாமலை அவரது தந்தைக்கு ஊசி போடுவதற்காக வந்த செவிலியர் இடம் தன் தாய் மற்றும் சகோதரியைப் பரிசோதிக்குமாறு கூறியுள்ளார்.

அப்போது அவர்கள் இருவரும் தாங்கள் விஷம் அருந்தியதாக தெரிவித்ததை தொடர்ந்து காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இங்கு மீனாள் மற்றும் நாச்சம்மைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 5

0

0