கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாய் – மகன் கைது: ஐந்து லட்சம் மதிப்புள்ள 18 கிலோ கஞ்சா பறிமுதல்

Author: Udhayakumar Raman
26 June 2021, 5:28 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒரு பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா பகுதிகளில் ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபகாலமாக காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் இன்று கோவை கரூர் நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை சோதனை செய்தனர்.

அதில் 18 கிலோ கஞ்சா கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த காங்கேயம் திரு.வி.க.நகரை சேர்ந்த கவாஸ்கர்(31) மற்றும் அவரது தாயார் ஜெயலட்சுமி (47)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா மற்றும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மாருதி கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காங்கேயம் துணை கண்காணிப்பாளர் குமரேசன் மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் பகுதியில் 18 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 440

0

0