இரவு முழுவதும் சடலத்துடன் தங்கிய தாய் – மகன் : அதிர வைத்த திருப்பூர் சம்பவம்.. போலீசார் அதிரடி ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 12:23 pm
Tirupur Murder 1 -Updatenews360
Quick Share

திருப்பூர் : குடிபோதையில் தினமும் தகராறு செய்துவந்த கணவனை மகனுடன் சேர்ந்து துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி இரவு முழுவதும் பிரேதத்துடன் இருந்த வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராயன் (எ)ராயப்பன் (வயது 46). கூலித் தொழிலாளியான இவர் மனைவி முருகாத்தாள் (வயது 45), 17 வயது மகன் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராயப்பன் தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் சண்டையிட்டும் அடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்கள் முன்பு கூட மது போதையில் ராயப்பன் தாக்கியதில் அவரது மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் ராயப்பனின் சகோதரி பாப்பாத்தி தனது சகோதரனை பார்க்க வந்தபோது, அவரது வீட்டில் இரத்தக் காயங்களுடன் ராயப்பன் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ராயப்பன் குடிபோதையில் தினமும் தகராறு செய்து அடித்து துன்புறுத்துவதாகவும், தகராறு செய்து அடித்தபோது ஏற்பட்ட கைகலப்பில் முருகாத்தாளும், அவரது மகனும் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த ராயப்பனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து முருகாத்தாள் மகனின் உதவியோடு ராயப்பனின் கழுத்தில் துண்டை இருக்கி கொலை செய்ததும், இதையடுத்து செய்வதறியாமல் பிரேதத்துடன் வீட்டிலேயே இருந்து வந்ததுள்ளனர்.

ராயப்பனின் சகோதரி வந்ததை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முருகாத்தாள் மற்றும் அவரது இளம் சிறார் மகனையும் போலீசார் கைது செய்தனர். குடியினால் நன்றாக இருந்த குடும்பம் சீரழிந்து போனதாக அப்பகுதி மக்கள் ஆதங்கப்பட்டனர்.

Views: - 532

0

0